தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு..! இன்றைய நிலவரம் என்ன..?

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் இன்று சற்று அதிகரித்துள்ளது.

சென்னை,

தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அதிகரித்து கொண்டே வந்தது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 450-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 600-க்கும் விற்கப்பட்டது. அதன் பின்னர் மேலும் விலை அதிகரித்து, பின்னர் குறைந்து மார்ச் மாதம் 23-ந்தேதி ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 340-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 720-க்கும் விற்பனை ஆனது.

இதனையடுத்து விலை தொடர்ந்து ஏற்றம் கண்டது. இப்படியாக விலை எகிறி வந்து, இம்மாதத்தின் தொடக்கத்தில் அதாவது 1-ந்தேதி ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 500க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து விலை சரிந்து, கடந்த 15-ந் தேதி ஏறுமுகத்துக்கு சென்று மீண்டும் இறங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை சரிந்திருந்தது.

அதன்படி, ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.210 குறைந்து ஒரு கிராம் ரூ.13,140-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் நேற்று குறைந்திருந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.230-க்கும், கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைந்து ஒரு கிலோ 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்த நிலையில், தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,05,760-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.235-க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்து ஒரு கிலோ 2 லட்சத்து 35 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

26.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,05,760 (இன்று)

25.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,05,120 (நேற்று)

24.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,06,800

23.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,480

22.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,800

21.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,800