தங்கம்

வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன.?

வெள்ளியின் விலையின் எந்த மாற்றமும் இல்லை.

சென்னை,

தங்கம் விலை கடந்த ஓரிரு நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று முன் தினம் தங்கத்தின் விலை ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,840க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.14,730க்கு விற்பனை செய்யப்பட்டது. விடுமுறை தினம் என்பதால் நேற்றைய தங்கம் விலையில் மாற்றம் இல்லை.

இந்நிலையில், வார தொடக்கமான இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.1,18,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒருகிராம் ரூ.14,780-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. சென்னையில் வெள்ளி விலை கிராமிற்கு ரூ.295க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,95,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 7 நாட்கள் தங்கம் விலை நிலவரம்

மே 25: ஒரு சவரன் ரூ. 1,18,240 | ஒரு கிராம் ரூ.14,780

மே 24: ஒரு சவரன் ரூ. 1,17,840 | ஒரு கிராம் ரூ.14,730

மே 23: ஒரு சவரன் ரூ. 1,17,840 | ஒரு கிராம் ரூ.14,730

மே 22: ஒரு சவரன் ரூ. 1,18,240 | ஒரு கிராம் ரூ.14,780

மே 21: ஒரு சவரன் ரூ. 1,18,480 | ஒரு கிராம் ரூ.14,810

மே 20: ஒரு சவரன் ரூ. 1,18,000 | ஒரு கிராம் ரூ.14,750

மே 19: ஒரு சவரன் ரூ. 1,18,960 | ஒரு கிராம் ரூ.14,870

கடந்த 7 நாட்கள் வெள்ளி விலை நிலவரம்

மே 25: ஒரு கிலோ ரூ.2,95,000 | ஒரு கிராம் ரூ.295

மே 24: ஒரு கிலோ ரூ.2,95,000 | ஒரு கிராம் ரூ.295

மே 23: ஒரு கிலோ ரூ.2,95,000 | ஒரு கிராம் ரூ.295

மே 22: ஒரு கிலோ ரூ.2,95,000 | ஒரு கிராம் ரூ.295

மே 21: ஒரு கிலோ ரூ.2,90,000 | ஒரு கிராம் ரூ.290

மே 20: ஒரு கிலோ ரூ.2,85,000 | ஒரு கிராம் ரூ.285

மே 19: ஒரு கிலோ ரூ.3,00,000 | ஒரு கிராம்ரூ.300