சென்னை,
தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.800 குறைந்துள்ளது.
தங்கம் விலை கடந்த 5-ந்தேதியில் இருந்து உயர்ந்து வருகிறது. அன்றைய தினம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,240 உயர்ந்திருந்தது. நேற்று மட்டும் சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த சூழலில், தங்கம் விலை இன்று காலை மீண்டும் அதிரடியாக உயர்ந்தது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,14,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,250-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தங்கம் விலை மாலையில் சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.14,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிலோ வெள்ளி ரூ,2,60,000க்கும், ஒரு கிராம் வெள்ளி ரூ.260க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.