தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு... இன்றைய நிலவரம் என்ன...?

வார தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை உயர்ந்து வருகிறது.

சென்னை,

தங்கம் விலை கடந்த வார தொடக்கத்தில் உயர்ந்து வந்த நிலையில், வார இறுதியில் அதிரடியாக குறைந்தது. சனிக்கிழமை அன்று சவரனுக்கு ரூ.2,480-ம், கிராமுக்கு ரூ.310-ம் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,01,840-க்கும், ஒரு கிராம் ரூ.12,730-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதற்கிடையே, வார தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை உயர்ந்து வருகிறது. அதன்படி, 1-ந்தேதி ஒரு சவரன் ரூ.1,01,840-க்கும், ஒரு கிராம் ரூ.12,730-க்கும் விற்பனையானது. 2-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.1,02,200-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.12,775-க்கும் விற்பனையானது. நேற்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,02,400-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.12,800-க்கும் விற்பனையானது.

தங்கம் விலை

இந்த நிலையில், சென்னையில் 3-வது நாளாக இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,02,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,825-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.200-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

SCROLL FOR NEXT