தங்கம்

தங்கம், வெள்ளி விலையில் மாற்றம்: இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை நேற்று காலையில் சவரனுக்கு ரூ.7,600 குறைந்து, மாலையில் ரூ.5,360 உயர்ந்திருந்தது.

சென்னை,

மேற்கு ஆசிய நாடுகளில் நிலவும் போர் சூழல், சர்வதேச பொருளாதாரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச்சந்தை முதலீடு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

அந்த வகையில், சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.13 ஆயிரத்து 620-க்கும், ஒரு சவரன் 1 லட்சத்து 8 ஆயிரத்து 960-க்கும் விற்கப்பட்டது.

நேற்று காலை வர்த்தகம் தொடங்கியதும் தங்கம் விலை சரிந்தது. அதாவது கிராமுக்கு ரூ.670 குறைந்தது. தொடர்ந்து நேற்று மாலை ரூ.280 குறைந்து. அதாவது ஒரே நாளில் கிராமுக்கு ரூ.950-ம், சவரனுக்கு ரூ.7,600-ம் குறைந்தது.

அதன்படி ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 670-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து ஆயிரத்து 360-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் வெள்ளியின் விலை கிராம் ரூ.235-க்கு விற்பனை ஆனது. இந்த விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

தொடர்ந்து நேற்று மாலை 5.30 மணிக்கு திடீரென ஒரு கிராம் தங்கம் ரூ.670 உயர்ந்து, ரூ.13 ஆயிரத்து 340-க்கு விற்கப்பட்டது. அதாவது சவரனுக்கு ரூ.5,360 உயர்ந்தது. ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 720-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.250-க்கு விற்பனை ஆனது.

தங்கம் விலை

இந்த நிலையில் தங்கம் விலை இன்றும் அதிரடியாக சரிந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.2,720 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,04,000-க்கும், கிராமுக்கு ரூ.340 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ. 240-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

24.03.2026 ஒரு சவரன் ரூ. 1,04,000 (இன்று)

23.03.2026 ஒரு சவரன் ரூ. 1,06,720 (நேற்று)

22.03.2026 ஒரு சவரன் ரூ. 1,08,960

21.03.2026 ஒரு சவரன் ரூ. 1,08,960

20.03.2026 ஒரு சவரன் ரூ. 1,11,600

19.03.2026 ஒரு சவரன் ரூ. 1,11,200