சென்னை,
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப நாள்தோறும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, தங்கம், வெள்ளி மீது சர்வதேச முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தவாறு இருக்கிறது. இதன்படி இந்த ஆண்டு தொடக்கம் முதலே தங்கம் மற்றும் வெள்ளி விலை உச்சம் தொட்டு வருகிறது. கடந்த 1-ந்தேதி கிராம் ரூ.14,900, சவரன் ரூ.1,19,200 ஆகவும் விற்பனை ஆனது. அதன் பின்னர், தங்கம் சற்று ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வந்தது.
கடந்த 10-ந்தேதி கிராம் ரூ.14,580, சவரன் ரூ.1,16,640-க்கும் விற்பனையானது. 11-ந்தேதி விலை சற்று அதிகரித்து கிராமுக்கு ரூ.210-ம், சவரனுக்கு ரூ.1,680-ம் உயர்ந்தது. இதையடுத்து தங்கம் விலையில் சிறிய அளவு மாற்றம் காணப்பட்டு விற்பனையானது. கடந்த 14-ந்தேதி கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.14,560 ஆகவும், சவரனுக்கு ரூ.1,280 அதிகரித்து ரூ.1,16,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 15-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் விலையில் மாற்றமில்லை.
இந்த நிலையில், தங்கம் நேற்று சற்று விலை குறைந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.120-ம், சவரனுக்கு ரூ.960-ம் குறைந்தது. அந்த வகையில், கிராம் ரூ.14,440-க்கும், சவரன் ரூ.1,15,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 3 நாட்களாக வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் இருந்து வந்தது. நேற்று வெள்ளி கிராம் ரூ.15 குறைந்து ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனையானது.
இந்தநிலையில் சென்னையில், தங்கம் விலை இன்று மேலும் குறைந்துள்ளது. அதன்படி, ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ஒரு பவுன் ரூ.1,14,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து , ஒரு கிராம் ரூ.14,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனையாகி வருகிறது.
17.01.2026 - ஒரு சவரன் - ரூ.1,14,560 (இன்று)
16.01.2026 - ஒரு சவரன் - ரூ.1,15,520 (நேற்று)
15.01.2026 - ஒரு சவரன் - ரூ.1,16,480
14.01.2026 - ஒரு சவரன் - ரூ.1,16,480
13.01.2026 - ஒரு சவரன் - ரூ.1,15,200
12.01.2026 - ஒரு சவரன் - ரூ.1,16,800