சென்னை,
தங்கம் விலை கடந்த 10, 11-ந்தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், நேற்று விலை குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 120-க் கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து 960-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 970-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 760-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.
தங்கத்தை போலவே, வெள்ளி விலையும் குறைந்து இருந்தது. நேற்று கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.290-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று மேலும் சரிவை சந்தித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,19,200-க்கும், கிராமுக்கு ரூ.70 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே அதாவது ஒரு கிராம் ரூ.290-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
13.03.2026 ஒரு சவரன் - ரூ.1,19,200 (இன்று)
12.03.2026 ஒரு சவரன் - ரூ.1,19,760 (நேற்று)
11.03.2026 ஒரு சவரன் - ரூ.1,20,960
10.03.2026 ஒரு சவரன் - ரூ.1,20,400
09.03.2026 ஒரு சவரன் - ரூ.1,19,600
08.03.2026 ஒரு சவரன் - ரூ.1,20,400