தங்கம்

நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்துக்கு கீழ் வந்த தங்கம் விலை

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.640-ம் குறைந்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 560-க்கு விற்கப்பட்டது.

சென்னை,

தங்கம் விலை கடந்த 12-ந்தேதியில் இருந்து தொடர்ந்து விலை சரிந்து வருவதை பார்க்க முடிகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் அதன் விலை குறைந்து காணப்பட்டது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 650-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 200-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 570-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 560-க்கும் விற்கப்பட்டது.

இதன் மூலம் தங்கம் விலை ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்துக்கு கீழ் வந்திருந்தது. வெள்ளி விலையும் நேற்று குறைந்து இருந்தது. கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.275-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்த நிலையில் தங்கம் விலை இன்றும் அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.2,160 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,14,400-க்கும், கிராமுக்கு ரூ.270 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.820-ம், சவரனுக்கு ரூ.6,500-ம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ. 265-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

19.03.2026 ஒரு சவரன் ரூ. 1,14,400 (இன்று)

18.03.2026 ஒரு சவரன் ரூ. 1,16,560 (நேற்று)

17.03.2026 ஒரு சவரன் ரூ.1,17,200

16.03.2026 ஒரு சவரன் ரூ.1,17,680

15.03.2026 ஒரு சவரன் ரூ.1,18,080

14.03.2026 ஒரு சவரன் ரூ.1,18,080