தங்கம்

சற்று உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.270-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

தங்கம் விலை கடந்த 19-ந்தேதி வரை ஏற்ற, இறக்கத்துடன் நீடித்த நிலையில், கடந்த 20-ந்தேதிக்கு பிறகு விலை படிப்படியாக குறைந்து கொண்டே வருவதை பார்க்க முடிகிறது. அந்தவகையில் நேற்றும் விலை குறைந்து இருந்தது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 160-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 280-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 100-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலையும் நேற்று குறைந்து காணப்பட்டது. கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.265-க்கும். ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.

தங்கம் விலை

இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, தங்கம் கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 14,200-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.270-க்கும், கிலோவுக்கு ரூ. 5 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

25.04.2026 ஒரு சவரன் ரூ.1,13,600 (இன்று)

24.04.2026 ஒரு சவரன் ரூ.1,12,800 (நேற்று)

23.04.2026 ஒரு சவரன் ரூ.1,13,280

22.04.2026 ஒரு சவரன் ரூ.1,14,000

21.04.2026 ஒரு சவரன் ரூ.1,14,400

20.04.2026 ஒரு சவரன் ரூ.1,14,400