தங்கம்

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,08,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னை,

தங்கம் விலை கடந்த 12-ந்தேதியில் இருந்து குறைய தொடங்கியது. இந்த நிலையில்,கடந்த 23, 24-ந்தேதிகளில் மட்டும் காலையில் குறைவதும், மாலையில் அதிகரிப்பதுமான நிலையில் தங்கம் இருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் அதேபோல் மாற்றம் இருக்குமோ? என எதிர்பார்த்த சூழலில், விலை திடீரென்று அதிகரித்தது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 250-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.350-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 800-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 600-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கத்தை போல, வெள்ளி விலையும் நேற்று உயர்ந்து இருந்தது. நேற்று கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் அதிகரித்து. ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.

தங்கம் விலை

இந்த நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,09,360-க்கும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,670-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையை பொறுத்தவரையில் விலை மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி வெள்ளி விலை ஒரு கிராம் ரூ. 260-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகி வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

26.03.2026 - ஒரு சவரன் ரூ. 1,09,360 (இன்று)

25.03.2026 - ஒரு சவரன் ரூ. 1,08,800 (நேற்று)

24.03.2026 - ஒரு சவரன் ரூ. 1,06,000

23.03.2026 - ஒரு சவரன் ரூ. 1,06,720

22.03.2026 - ஒரு சவரன் ரூ. 1,08,960

21.03.2026 - ஒரு சவரன் ரூ. 1,08,960

20.03.2026 - ஒரு சவரன் ரூ. 1,11,600