சென்னை,
தங்கம் விலை கடந்த 12-ந்தேதியில் இருந்து குறைய தொடங்கியது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக காலையில் உயர்வதும், மாலையில் குறைவதுமான நிலையில் தங்கம் இருந்து வருகிறது.
நேற்று காலை, தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று காலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,09,360-க்கும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,670-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மாலையில் அதிரடியாக தங்கம் விலை சரிந்தது. இதன்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.320 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,350க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,560 குறைந்து, ரூ.1,06,800க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260க்கும், ஒரு கிலோ ரூ.2,60,000க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்றும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,07,440-க்கும், கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,430-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15-ம், கிலோவுக்கு ரூ.15 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ. 245-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகி வருகிறது.
26.03.2026 - ஒரு சவரன் - ரூ. 1,07,440 (இன்று)
26.03.2026 - ஒரு சவரன் - ரூ. 1,06,800 (நேற்று)
25.03.2026 - ஒரு சவரன் - ரூ. 1,08,800
24.03.2026 - ஒரு சவரன் - ரூ. 1,06,000
23.03.2026 - ஒரு சவரன் - ரூ. 1,06,720
22.03.2026 - ஒரு சவரன் - ரூ. 1,08,960