சென்னை,
தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் நீடித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. அதன்படி நேற்றும் தங்கம் விலை உயர்ந்து இருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 220-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 760-க்கும் விற்பனை ஆனது.
நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 320-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 560-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்திருந்தது. இதன்படி கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.275-ம், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்றும் (16.04.2026 - வியாழக்கிழமை) அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 14,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே அதாவது, ஒரு கிராம் ரூ.275-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
16.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,14,880 (இன்று)
15.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,14,560 (நேற்று)
14.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,760
13.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,480
12.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,800
11.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,800