சென்னை,
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற-இறக்கம் நீடிக்கிறது. அப்படியாக கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து விலையில் பெருமளவில் இறக்கமே இருந்தது. அதன்படி, நேற்று முன்தினமும், நேற்றும் விலை குறைந்து வந்ததை பார்க்க முடிகிறது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.70-ம், பவுனுக்கு ரூ.560-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 300-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 400-க்கும் விற்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது. காலையில் பவுனுக்கு ரூ.2,160 குறைந்து. மதியம் ரூ.1,360 உயர்ந்தது. ஆக மொத்தம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 200-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.13,100-க்கும், பவுனுக்கு ரூ.800 குறைந்து ஒரு பவுன் ரூ.1,04,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.