தங்கம்

தங்கம் விலை சற்று குறைவு... இன்றைய நிலவரம் என்ன...?

இன்று வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.

சென்னை,

தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. அதன்படி, நேற்று தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 675-க்கும். சவரன் ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்த நிலையில், தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 280-க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து கிராம் ரூ.13 ஆயிரத்து 660-க்கும். விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

இன்று வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.245-க்கும். ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

SCROLL FOR NEXT