சென்னை,
தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த 5-ந்தேதி வரை ஏறுமுகமாக இருந்த தங்கம் விலை, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 560-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 480-க்கும் விற்பனை ஆனது.
நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.160-ம், பவுனுக்கு ரூ.1,280-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 400-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், நேற்று விலை மாற்றம் இல்லை. ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.70-ம், பவுனுக்கு ரூ.560-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 330-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 640-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.370-ம், பவுனுக்கு ரூ.2,960-ம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தைபோல வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.245-க்கும், கிலோவுக்கு ரூ. 5 ஆயிரம் குறைந்து ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.