சென்னை,
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர் சரிவை சந்தித்து வருகிறது. அந்தவகையில், கடந்த ஞாயிறு விடுமுறை தினமான நேற்று முன்தினம் தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,14,160-க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.14,270-க்கும் விற்பனை செய்யப்பட்டது
இந்த நிலையில் தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,080-க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,135-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது.
வெள்ளி விலையில் இன்று எந்தவித மாற்றமும் இல்லை. ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.