சென்னை,
தங்கம் விலை கடந்த 12-ந்தேதியில் இருந்து குறைய தொடங்கியது. இந்த நிலையில், கடந்த 23, 24-ந்தேதிகளில் மட்டும் காலையில் குறைவதும், மாலையில் அதிகரிப்பதுமான நிலையில் தங்கம் இருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் அதே போல் மாற்றம் இருக்குமோ? என எதிர்பார்த்த சூழலில், விலை திடீரென்று எகிறியது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 250-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.350-ம், பவுனுக்கு ரூ.2 ஆயிரத்து 800-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 600-க்கும். ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கத்தை போல. வெள்ளி விலையும் நேற்று உயர்ந்து இருந்தது. நேற்று கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் அதிகரித்து. ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.
இன்று காலை, தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்தது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,09,360-க்கும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,670-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்தநிலையில் மாலையில் அதிரடியாக தங்கம் விலை சரிந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.320 குறைந்து ரூ.13,350க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,560 குறைந்து ரூ.1,06,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலையில் சவரனுக்கு ரூ.560 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.2,500 குறைந்துள்ளது.
சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிலோ ரூ.2,60,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
26.03.2026 - ஒரு சவரன் ரூ. 1,06,800 (மாலை)
26.03.2026 - ஒரு சவரன் ரூ. 1,09,360 (இன்று)
25.03.2026 - ஒரு சவரன் ரூ. 1,08,800 (நேற்று)
24.03.2026 - ஒரு சவரன் ரூ. 1,06,000
23.03.2026 - ஒரு சவரன் ரூ. 1,06,720
22.03.2026 - ஒரு சவரன் ரூ. 1,08,960
21.03.2026 - ஒரு சவரன் ரூ. 1,08,960
20.03.2026 - ஒரு சவரன் ரூ. 1,11,600