தங்கம்

ஒரேநாளில் 2-வது முறையாக குறைந்தது தங்கம் விலை

தங்கம். வெள்ளி விலை குறைந்து வருவது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை,

நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.80-ம், பவுனுக்கு ரூ.640-ம் குறைந்திருந்தது. நேற்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.14 ஆயிரத்து 570 பவுன் விலை ரூ. 1 லட்சத்து 16 ஆயிரத்து 560 ஆக இருந்தது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு மேலும் ரூ.270-ம், பவுனுக்கு ரூ.2160-ம் குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.14 ஆயிரத்து 300 பவுன் விலை ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 400 ஆக உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.820-ம். பவுனுக்கு ரூ.6560-ம் குறைந்துள்ளது. வெள்ளியின் விலையும் கணிசமாக குறைந்து வருகிறது. நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.275. ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் ஆக இருந்தது. இன்று கிராமுக்கு ரூ.10-ம் கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 265, ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் ஆக உள்ளது.

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.5,360 குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,220-ம், சவரனுக்கு ரூ.9,760-ம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று மாலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,200 குறைந்து ஒரு சவரன் 1,11,200க்கும், கிராமுக்கு ரூ.400 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மாலையில் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.

தங்கம். வெள்ளி விலை குறைந்து வருவது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனினும் தொடர் விலை சரிவால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை குறைத்துள்ளனர்.