தங்கம்

ஒரே நாளில் 2-வது முறையாக சரிந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.960 குறைந்தது

இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது.

சென்னை,

தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.520-ம், கிராமுக்கு ரூ.65-ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,11,040-க்கும், ஒரு கிராம் ரூ.13,880-க்கும் விற்பனையானது.

காலையில் குறைந்தது

இந்த நிலையில் வார தொடக்கத்தில் இன்று காலை தங்கம் விலை குறைந்தது. அதன்படி, இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,10,720-க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,840-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

மாலையிலும் ரூ.960 குறைந்தது

இந்த நிலையில், இன்று 2-வது முறையாக தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, மலையில் சவரனுக்கு ரூ.960 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,09,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.120 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,720க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை மொத்தமாக சவரனுக்கு ரூ.1,280ம், கிராமுக்கு ரூ.160ம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT