தங்கம்

காலையில் குறைந்து.. மாலையில் உயர்ந்த தங்கம் விலை!

தங்கம் விலை இன்று காலை கிராமுக்கு ரூ.30-ம், பவுனுக்கு ரூ.240-ம் குறைந்திருந்தது.

சென்னை,

தங்கம் விலை காலை மற்றும் பிற்பகலில் விலை மாற்றம் இருந்து வருகிறது. சில நேரங்களில் பிற்பகல் என்பது மாலை நேரங்களில் கூட விலை மாற்றம் காணப்படுவதை பார்க்க முடிகிறது. இந்த சூழலில் நேற்று ஒரே நாளில் 3 முறை விலை மாற்றம் இருந்தது.

நேற்று 3 முறை மாற்றம்

காலையில் கிராமுக்கு ரூ.70-ம், பவுனுக்கு ரூ.560-ம் குறைந்திருந்தது. பின்னர் மாலையில் மேலும் கிராமுக்கு ரூ.130-ம், பவு னுக்கு ரூ.1,040-ம் குறைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்திலேயே 2-வது முறையாக மாற்றம் செய்யப்பட்ட விலை குறித்த தகவல்கள் அகற்றப்பட்டு, கிராமுக்கு ரூ.80-ம், பவுனுக்கு ரூ.640-ம் மட்டுமே குறைந்ததாக சொல்லப்பட்டது.

அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 3 முறை விலை மாற்றம் கண்டு, மொத்தத்தில் கிராமுக்கு ரூ.150-ம், பவுனுக்கு ரூ.1,200-ம் சரிந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 250-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

இன்றைய தங்கம் விலை

தங்கம் விலை இன்று காலை குறைந்தது. அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.30-ம், பவுனுக்கு ரூ.240-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 220-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 760-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்ந்துள்ளது. அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.100-ம், பவுனுக்கு ரூ.800-ம் அதிகரித்தது, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 320-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.