தங்கம்

காலையில் குறைந்த தங்கத்தின் விலை மாலையில் அதிரடி உயர்வு... நிலவரம் என்ன?

வெள்ளியின் விலையை பொறுத்தவரையில் காலையில் கிராமுக்கு ரூ.10 குறைந்து மாலையில் அதிகரித்துள்ளது.

சென்னை,

கடந்த சில தினங்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை. நேற்று சவரனுக்கு ரூ.880 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,14,040க்கும், கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,255க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தங்கம் விலை

தங்கம் விலை இன்று காலையில் ஒரேயடியாக சரிவை சந்தித்தது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,920 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,112க்கும், கிராமுக்கு ரூ.240 குறைந்து ஒரு கிராம் ரூ.14,015க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் காலையில் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை மாலையில் அதிகரித்துள்ளது. அதன்படி சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 1,13,240க்கும், ஒரு கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,145க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலையை பொறுத்தவரையில் காலையில் கிராமுக்கு ரூ.10 குறைந்து மாலையில் அதிகரித்துள்ளது. அதன்படி, வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், கிலோவுக்கு 5,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT