சென்னை,
தங்கம் விலை கடந்த 5-ந்தேதியில் இருந்து 'டாப்' கியரில் எகிறி வருகிறது. அன்றைய தினம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,240 உயர்ந்திருந்தது. நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,11,720-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,985-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், 4 நாட்கள் தொடர் ஏற்றத்துக்கு பிறகு தங்கம் விலை இன்று சரிவை சந்தித்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்றும் மாற்றம் இல்லை. ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.