சென்னை:
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வந்த நிலையில், கடந்த 24-ந்தேதி முதல் மீண்டும் உயரத் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினமும் தங்கம் விலை அதிகரித்தது. அன்றைய தினம் சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.13,195-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 560-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.155 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,040-க்கும், சவரனுக்கு ரூ.1,240 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,04,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.210-க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.