தங்கம்

மீண்டும் அதிகரித்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.5 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

தங்கம் விலை கடந்த 14-ந்தேதியில் இருந்து தொடர்ந்து 3 நாட்கள் உயர்ந்து வந்தது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் நேற்று விலை சற்று சரிவை சந்தித்தது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 360-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 880-க்கும் விற்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 210-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 680-க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலையில் 2-வது நாளாக நேற்றும் மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் ரூ.275-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்த நிலையில், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று (18.04.2026 வெள்ளிக்கிழமை) சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.150 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 14,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.280-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

18.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,14,880 (இன்று)

17.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,680 (நேற்று)

16.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,14,880

15.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,14,560

14.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,760

13.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,480