கோப்புப்படம் 
தங்கம்

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,19,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னை,

தங்கம் விலை கடந்த மாதம் (பிப்ரவரி) இறுதி வரை ஏற்ற-இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த சூழலில் ஈரான் அமெரிக்கா போரின் காரணமாக தங்கம் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 2-ந்தேதி முதல் தங்கம் விலை குறைந்து கொண்டே வந்த நிலையில், கடந்த சில நாட்களாக விலை அதிகரித்து வந்தது.

நேற்று சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,19,600-க்கும், கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,950-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளிவிலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.290-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்நிலையில் தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,20,400-க்கும், கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,050-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளிவிலையும் இன்று உயர்ந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.300-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3,00,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

10.03.2026 - ஒரு சவரன் - ரூ.1,20,400 (இன்று)

09.03.2026 - ஒரு சவரன் - ரூ.1,19,600 (நேற்று)

08.03.2026 - ஒரு சவரன் - ரூ.1,20,400

07.03.2026 - ஒரு சவரன் - ரூ.1,20,400

06.03.2026 - ஒரு சவரன் - ரூ.1,19,680

05.03.2026 - ஒரு சவரன் - ரூ.1,20,960