சென்னை,
தங்கம் விலை கடந்த மாதம் (மே) இறுதி வரை ஏற்ற-இறக்கத்துடன் பயணித்தது. இப்படியாக இருந்த தங்கம் விலை இம்மாத தொடக்கத்தில் இருந்து தொடர் சரிவை சந்தித்து வருவதை பார்க்க முடிகிறது. கடந்த 1-ந்தேதி கிராமுக்கு ரூ.130-ம், சவரனுக்கு ரூ.1,040-ம் குறைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து 2 மற்றும் 3-ந்தேதிகளில் விலை மாற்றம் இல்லாமல் இருந்தது. பின்னர் 4-ந்தேதிக்கு பிறகு மீண்டும் குறையத் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலையில் பெரும் சரிவு இருந்தது.
அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.130-ம், சவரனுக்கு ரூ.1,040-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 70-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 560-க்கும் விற்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.560-ம், சவரனுக்கு ரூ.4 ஆயிரத்து 480-ம் குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலையை பொறுத்தவரையில், நேற்று 3-வது நாளாக விலை மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் ரூ.270-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,200-க்கும், சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளியின் விலை 4-வது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.270-க்கும் ஒரு கிலோ ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
09.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600 (இன்று)
08.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,560 (நேற்று)
07.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600
06.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600
05.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,15,440
04.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,15,840