சென்னை,
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற-இறக்கம் கண்டு வந்து, கடந்த மாதம் (ஜூன்) இறுதியில் விலை மளமளவென சரிந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் இரு முறை தங்கம் விலை மாற்றம் கண்டது. காலையில் ரூ.2,160 குறைந்து, மாலையில் ரூ.1,360 உயர்ந்திருந்தது. இதனையடுத்து 2-வது நாளாக நேற்றும் ஒரே நாளில் இரு முறை விலை மாற்றம் இருந்தது.
அதன்படி, நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100-ம். சவரனுக்கு ரூ.800-ம் குறைந்திருந்த நிலையில். மாலையில் கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் உயர்ந்திருந்தது.
ஆக மொத்தம் நேற்று முன்தினம் விலையைவிட நேற்று கிராமுக்கு ரூ.50-ம். சவரனுக்கு ரூ.400-ம் உயர்ந்து. ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 250-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.
வெள்ளி விலையை பொறுத்தவரையில், தொடர்ந்து 5-வது நாளாக நேற்றும் மாற்றம் இல்லை. ஒரு கிராம் ரூ.245-க்கும். ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.
இந்தநிலையில் வாரத்தின் 4-வது நாளில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ. 1,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,07.200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை ரூ.5,000 உயர்ந்து கிலோ ரூ.2,50,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.