தங்கம்

சற்று உயர்ந்த தங்கம் விலை.! இன்றைய நிலவரம் என்ன.?

வெள்ளியின் விலையில் மாற்றமில்லை.

சென்னை,

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.

தங்கம் விலை

கடந்த சில தினங்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை, நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.880 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,14,040க்கும், கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,255க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதற்கிடையே தங்கம் விலை நேற்று காலையில் ஒரேயடியாக சவரனுக்கு ரூ.1,920 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,112க்கும், கிராமுக்கு ரூ.240 குறைந்து ஒரு கிராம் ரூ.14,015க்கும் விற்பனை செய்யப்பட்டது. காலையில் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை மாலையில் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,240க்கும், ஒரு கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,145க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தங்கம் விலை

இந்த நிலையில், தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.1,13,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 உயர்ந்து 14,170க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT