தங்கம்

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன.?

வெள்ளி விலை இன்று ரூ.5 உயர்ந்து ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை,

கடந்த 1-ம் தேதி குறைந்து விற்பனை செய்யப்பட்ட தங்கம் விலை நேற்று முன்தினம் சற்று அதிகரித்து காணப்பட்டது. அதன்படி, தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.240 உயர்ந்து ரூ.1,06,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதே போல் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,250-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

நேற்றைய தங்கம் விலை

நேற்றைய நிலவரப்படி, தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.400 குறைந்து ரூ.1,05,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்றைய தங்கம் விலை

இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 1,280 உயர்ந்து ரூ.1,06,880-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,360-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

சென்னையில் வெள்ளி விலை 7 நாட்களுக்கு பிறகு ஒரு கிராம் ரூ.5 உயர்ந்து ரூ.240-க்கும், ஒரு கிலோ ரூ. 5,000 உயர்ந்து ரூ.2,40,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.