சென்னை,
தங்கம் விலை கடந்த 5-ந்தேதியில் இருந்து 'டாப்' கியரில் எகிறி வருகிறது. அன்றைய தினம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,240 உயர்ந்திருந்தது. நேற்று மட்டும் சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயரத் தொடங்கியுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி வெள்ளி கிலோவுக்கு ரூ.10,000 அதிகரித்து ஒரு கிலோ ரூ,2,60,000க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.160க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.