சென்னை,
சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப நாள் தோறும் தங்கத்தின் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.
கடந்த 10-ந்தேதி கிராம் ரூ.13 ஆயிரத்து 950-க்கும், சவரன் ரூ. 1 லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர், தங்கம் விலை ஏற்றத்துடனே பதிவாகி வந்தது. இந்த நிலையில், கடந்த 18-ந்தேதி கிராம் ரூ.14 ஆயிரத்து 290-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செயப்பட்டது.
இதனையடுத்து நேற்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்தது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,16,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,17,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.110 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,710-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று சற்று உயர்ந்துள்ளது. அதன்படி வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.265-க்கும், கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.