தங்கம்

தங்கம் விலை ஏற்றம்: சவரனுக்கு ரூ.560 உயர்வு..!

தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலையில் நேற்று உயர்வு காணப்பட்டது.

சென்னை,

தங்கம் விலையில் ஏற்ற-இறக்கம் தொடர்ந்து நீடிக்கிறது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலையில் நேற்று உயர்வு காணப்பட்டது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13,140-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 120-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.160-ம், சவரனுக்கு ரூ.1,280-ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 300-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 400-க்கும் விற்கப்பட்டது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் அதிகரித்து ஒரு கிராம் ரூ.245-க்கும். ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்த நிலையில், தங்கம் விலை இன்று மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,06,960-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,370-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே அதாவது ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 35 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

27.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,06,960 (இன்று)

26.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,06,400 (நேற்று)

25.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,05,120

24.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,06,800

23.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,480

22.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,800