தங்கம்

வாரத்தின் முதல் நாளில் உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன...?

கடந்த 20-ந்தேதிக்கு பிறகு தங்கம் விலை படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது.

சென்னை,

தங்கம் விலை கடந்த 19-ந்தேதி வரை ஏற்ற, இறக்கத்துடன் நீடித்த நிலையில், கடந்த 20-ந்தேதிக்கு பிறகு விலை படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. அந்தவகையில் கடந்த 24-ம் தேதியும் விலை குறைந்து இருந்தது.

இதனையடுத்து நேற்று முன்தினம் தங்கம் விலை சற்று உயர்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 14,200-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் ரூ.270-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் விற்பனையானது.

தங்கம் விலை:-

இந்த நிலையில், தங்கம் விலை இன்றும் உயர்ந்துள்ளது. அதன்படி, தங்கம் கிராமுக்கு ரூ.30-ம், சவரனுக்கு ரூ.240-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 14,230-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,840-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை:-

வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.