சென்னை,
தங்கம் விலை கடந்த 24-ந்தேதி வரை குறைந்து வந்த நிலையில், 25-ந்தேதியில் இருந்து மீண்டும் ஏற்றம் கண்டது. இதனையடுத்து நேற்று முன்தினம் மீண்டும் விலை குறைந்தது. அதன் தொடர்ச்சியாக 2-வது நாளாக நேற்றும் விலை சரிந்தது. இன்று காலையில் தங்கம் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.1,11,200-க்கும், ஒரு கிராம் ரூ.13,900-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாலையில் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,12,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலையும் இன்று காலையில் மாற்றமின்றி விற்பனையான நிலையில் மாலையில் உயர்ந்துள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.270-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.