தங்கம்

குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன.?

வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை,

தங்கம் விலை கடந்த 27-ந்தேதி வரை உயர்ந்து வந்து, 28, 29-ந்தேதிகளில் குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 230-க்கும். ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 840-க்கும் விற்பனை ஆனது.

தங்கம் விலை

நேற்றைய நிலவரப்படி, சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,040-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,255-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இன்றைய தங்கம் விலை

இந்த நிலையில், தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,760-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.35 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,220-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

சென்னையில் வெள்ளி விலை 4-வது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.