சென்னை,
தங்கத்தின் விலை ஏறுமுகமாகவும், இறங்குமுகமாகவும் இருந்து வருகிறது. சென்னையில் கடந்த சனிக்கிழமை தங்கம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 775-க்கும், பவுன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது.
நேற்று முன்தினம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100-ம், பவுனுக்கு ரூ.800-ம் குறைந்தது. அதன்படி ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 675-க்கும். பவுன் ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 400-க்கும் விற்றது. வெள்ளி விலையை பொறுத்தவரை மாற்றம் இல்லாமல் கிராம் ரூ.245 ஆகவும், கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரமாகவும் இருந்தது.
இந்த நிலையில், சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கம் விலை மாற்றமின்றி ஒரு பவுன் ரூ.1,09,400-க்கும் ஒரு கிராம் ரூ.13,675க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையிலும் மாற்றம் இல்லை. கிராம் ரூ.245 ஆகவும், கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரமாகவும் விற்பனையாகிறது.