சென்னை,
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் தங்கம் ஒரு சவரன் ரூ.1,16,040-க்கும், ஒரு கிராம் ரூ.14,505-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.1,14,960-க்கும், கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.14,370-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் மாதத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,15,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,385-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்த வரையில் இன்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, வெள்ளி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.