தங்கம்

சற்று உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 குறைந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

சென்னை,

தங்கம் விலை இம்மாதம் தொடக்கத்தில் இருந்து சரிந்து கொண்டே வரு வதை பார்க்க முடிகிறது. கடந்த 6-ந்தேதி கிராமுக்கு ரூ.130-ம், சவரனுக்கு ரூ.1,040-ம் குறைந்தது.

அதனைத் தொடர்ந்தும் விலை இறங்குமுகத்திலேயே இருந்தது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.400-ம், சவரனுக்கு ரூ.3,200-ம் அதிரடியாக குறைந்து காணப்பட்டது.

அதன்படி, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 800-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.300-ம், சவரனுக்கு ரூ.2,400-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 500-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

கடந்த 1-ந்தேதி முதல் நேற்று வரையில், தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,000-ம், சவரனுக்கு ரூ.8 ஆயிரமும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்களால் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இது உலகளாவிய பணவீக்கத்தை அதிகரித்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த உலக நாடுகள் வட்டி விகிதங்களை இன்னும் சில காலத்திற்கு தொடர்ந்து அதிகமாகவே வைத்திருக்கும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

இதனால் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்து விலை சரியத் தொடங்கி உள்ளது. வெள்ளி விலையில் நேற்று மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.

தங்கம் விலை

இந்நிலையில், தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. அதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.300 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,800-க்கும், சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,10,400-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. இதன்படி வெள்ளிவிலை கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.265க்கும், ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

12.06.2026 ஒரு சவரன் - ரூ.1,10,400 (இன்று)

11.06.2026 ஒரு சவரன் - ரூ.1,08,000 (நேற்று)

10.06.2026 ஒரு சவரன் - ரூ.1,10,400

09.06.2026 ஒரு சவரன் - ரூ.1,13,600

08.06.2026 ஒரு சவரன் - ரூ.1,12,560

07.06.2026 ஒரு சவரன் - ரூ.1,13,600