சென்னை,
தங்கம், வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கத்துடனேயே நீடிக்கிறது. ஓரிரு நாட்கள் விலை ஏறுவதும், பின்னர் சரிவதுமான நிலையிலேயே பயணித்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஏற்ற, இறக்கத்துடன் நீடித்து வந்த தங்கம் விலை கடந்த 26-ந்தேதி முதல் குறைந்து கொண்டே வருகிறது. இதன் தொடர்ச்சியாக 3-வது நாளாக நேற்றும் விலை இறங்குமுகத்தை சந்தித்தது.
அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 650-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 500-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது. கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.280-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 240-ம் சரிந்திருந்தது.
வெள்ளி விலையை பொறுத்தவரையில் 2-வது நாளாக நேற்றும் குறைந்திருந்தது. நேற்று கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.285-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. கடந்த 2 நாட்களில் கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் சரிந்திருந்தது.
இந்த நிலையில், சென்னையில் தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, தங்கம் கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,600-க்கும், ஒரு சவரன் ரூ.1,16,800-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.290-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
29.05.2026 ஒரு சவரன் ரூ.1,16,800 (இன்று)
28.05.2026 ஒரு சவரன் ரூ.1,16,000 (நேற்று)
27.05.2026 ஒரு சவரன் ரூ.1,17,200
26.05.2026 ஒரு சவரன் ரூ.1,17,840
25.05.2026 ஒரு சவரன் ரூ.1,18,240
24.05.2026 ஒரு சவரன் ரூ.1,17,840