தங்கம்

சற்று குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

வெள்ளி விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது.

சென்னை,

அட்சய திருதியையொட்டி நேற்று முன்தினம் தமிழகத்தில் நகைக்கடைகளில் தங்கத்தின் விற்பனை அமோகமாக இருந்தது. தொடர்ந்து நேற்றும் நகைக்கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் தங்கத்தின் விலையும் சற்று குறைந்திருந்தது. நேற்று தங்கம் ஒரு சவரன் ரூ.1,14,400-க்கும், ஒரு கிராம் ரூ.14,300-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராம் ரூ.275-க்கும், கிலோ ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்திற்கும் விற்பனையானது.

தங்கம் விலை

இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.14,250-க்கும், சவரன் ரூ.1,14,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ.275-க்கும், கிலோ ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

22.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,14,000 (இன்று)

21.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,14,400 (நேற்று)

20.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,14,400

19.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,14,880

18.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,14,880

17.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,680