தங்கம்

சற்று குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக நேற்று விலை மாற்றமின்றி முந்தைய நாள் விலையிலேயே விற்பனை செய்யப்பட்டது.

சென்னை,

தங்கம், வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கத்துடனேயே நீடிக்கிறது. ஓரிரு நாட்கள் விலை ஏறுவதும், பின்னர் சரிவதுமான நிலையிலேயே பயணித்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஏற்ற, இறக்கத்துடன் நீடித்து வந்த தங்கம் விலை கடந்த 29-ம் தேதி சற்று அதிகரித்தது.

இந்த சூழலில், தங்கம் விலை கடந்த 1ம் தேதி அன்று அதிரடியாக குறைந்தது. அதன்படி, தங்கம் கிராமுக்கு ரூ.130-ம், சவரனுக்கு ரூ.1040-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14,500-க்கும், ஒரு சவரன் ரூ.1,16,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.290-க்கும், ஒரு கிலோ ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த சூழலில் தங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் (03.06.2026) விலை மாற்றமின்றி முந்தைய நாள் விலையிலேயே விற்பனை செய்யப்பட்டது. இதன்படி தங்கம் விலை ஒரு கிராம் ரூ.14,500-க்கும், ஒரு சவரன் ரூ.1,16,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையும் தொடர்ந்து 5-வது நாளாக நேற்று விலைமாற்றமின்றி ஒரு கிராம் ரூ.290-க்கும், ஒரு கிலோ ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்நிலையில் தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. இதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,480-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,15,840-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

தொடர்ந்து 6 நாட்களுக்கு பிறகு வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து, ஒரு கிராம் ரூ.285-க்கும், ஒரு கிலோ ரூ.2,85,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

04.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,15,840 (இன்று)

03.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,16,000 (நேற்று)

02.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,16,000

01.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,16,000

31.05.2026 - ஒரு சவரன் - ரூ.1,17,040

30.05.2026 - ஒரு சவரன் - ரூ.1,17,040