சென்னை,
தங்கம் விலை கடந்த மாதம் (பிப்ரவரி) இறுதி வரை ஏற்ற-இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த சூழலில் ஈரான் அமெரிக்கா போரின் காரணமாக தங்கம் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 2-ந்தேதி முதல் தங்கம் விலை குறைந்து கொண்டே வந்த நிலையில், கடந்த சில நாட்களாக விலை அதிகரித்து வந்தது.
நேற்று முன் தினம் சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,20,400-க்கும், கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,050-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,20,960-க்கும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளிவிலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.300-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3,00,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,19,760-க்கும், கிராமுக்கு ரூ.150 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,970-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.290-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
12.03.2026 - ஒரு சவரன் - ரூ.1,19,760 (இன்று)
11.03.2026 - ஒரு சவரன் - ரூ.1,20,960 (நேற்று)
10.03.2026 - ஒரு சவரன் - ரூ.1,20,400
09.03.2026 - ஒரு சவரன் - ரூ.1,19,600
08.03.2026 - ஒரு சவரன் - ரூ.1,20,400
07.03.2026 - ஒரு சவரன் - ரூ.1,20,400