தங்கம்

சற்று குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,680 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 560-க்கும் விற்கப்பட்டது.

சென்னை,

சென்னையில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை இறங்குமுகத்தில் இருந்து வந்தது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 860-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 880-க்கும் விற்பனையானது.

இந்தநிலையில் தங்கம் விலை மீண்டும் ஏற்றம் கண்டது. அதன்படி நேற்று கிராமுக்கு ரூ.210-ம், சவரனுக்கு ரூ.1,680-ம் அதிகரித்தது. தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 70-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 560-க்கும் நேற்று விற்கப்பட்டது.

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் நேற்று உயர்வு காணப்பட்டது. சென்னையில் நேற்று முன்தினம் வெள்ளி ஒரு கிராம் ரூ.270-க்கும், கிலோ ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் விற்கப்பட்ட நிலையில், நேற்று கிராமுக்கு 10 ரூபாயும், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் அதிகரித்தது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.280-க்கும், கிலோ ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்நிலையில், தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ. 14,060-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,480-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.275க்கும், ஒரு கிலோ ரூ.2,75,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

16.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,480 (இன்று)

15.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,560 (நேற்று)

14.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,880

13.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,880

12.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,400

11.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,000