கோப்புப்படம் 
தங்கம்

தங்கம் விலை உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது.

ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்தது. நேற்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.71,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது.

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,020-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.119-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

SCROLL FOR NEXT