தங்கம்

சற்று குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன...?

ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,95,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

தங்கம் விலை கடந்த ஓரிரு நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 1,18,480க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ. 14,810க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் கிராமிற்கு ரூ. 30 குறைந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 14,780க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சவரனுக்கு ரூ. 240 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 1,18,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளை, வெள்ளி விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் வெள்ளி விலை கிராமிற்கு ரூ. 5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 295க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு ரூ. 5,000 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,95,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 5 நாட்கள் தங்கம் விலை நிலவரம்

மே 21: ஒரு சவரன் - ரூ. 1,18,480 | ஒரு கிராம் - ரூ. 14,810

மே 20: ஒரு சவரன் - ரூ. 1,18,000 | ஒரு கிராம் - ரூ. 14,750

மே 19: ஒரு சவரன் - ரூ. 1,18,960 | ஒரு கிராம் - ரூ. 14,870

மே 18: ஒரு சவரன் - ரூ. 1,18,000 | ஒரு கிராம் - ரூ. 14,750

மே 16: ஒரு சவரன் - ரூ. 1,18,000 | ஒரு கிராம் - ரூ. 14,750

கடந்த 5 நாட்கள் வெள்ளி விலை நிலவரம்

மே 21: ஒரு கிலோ - ரூ. 2,90,000 | ஒரு கிராம் - ரூ. 290

மே 20: ஒரு கிலோ - ரூ. 2,85,000 | ஒரு கிராம் - ரூ. 285

மே 19: ஒரு கிலோ - ரூ. 3,00,000 | ஒரு கிராம் - ரூ. 300

மே 18: ஒரு கிலோ - ரூ. 3,00,000 | ஒரு கிராம் - ரூ. 300

மே 16: ஒரு கிலோ - ரூ. 2,90,000 | ஒரு கிராம் - ரூ. 290