கோப்புப்படம் 
தங்கம்

சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்..!

சென்னையில் தங்கம், வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.

சென்னை,

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்த நிலையில், நேற்று விலையில் மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.1,13,200-க்கும், ஒரு கிராம் ரூ.14,150-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று 2-வது நாளாக தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.1,13,200-க்கும், ஒரு கிராம் ரூ.14,150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்த வரையில், நேற்று கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்து ஒரு கிராம் ரூ.280-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று வெள்ளி விலையில் மாற்றமின்றி அதே விலையில் விற்பனையாகி வருகிறது.