சென்னை,
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற-இறக்கத்துடன் காணப்படுகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஒரேநாளில் இரு முறை மாற்றம் கண்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை காலை, மாலை என ஒரே நாளில் இருமுறை சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,08,400-க்கும் விற்பனையானது.
அதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,700-க்கும், ஒரு சவரன் ரூ.1,09,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலையில் மாற்றம் இல்லை. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.13,700-க்கும், ஒரு சவரன் ரூ.1,09,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.