சென்னை,
தங்கம் விலை இந்த மாத தொடக்கத்தில் இருந்து குறைந்து கொண்டே வந்தது. கடந்த 11-ந்தேதி விலை குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக விலை குறையும் என எதிர்பார்த்த நிலையில், மீண்டும் ஏறுமுகத்தில் பயணித்தது. அந்த வகையில் நேற்று முன்தினமும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,680 அதிரடியாக உயர்ந்தது.
இதனிடையே நேற்று தங்கம் விலை குறைந்தது. நேற்று கிராமுக்கு ரூ.10-ம், சவரனுக்கு ரூ.80-ம் குறைந்து, தங்கம் ஒரு கிராம் ரூ.14,060-க்கும், ஒரு சவரன் ரூ.1,12,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது.
அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,240-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.30 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,030-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்த வரையில் இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.275-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.