கோப்புப்படம் 
தங்கம்

மாலையில் மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை... சவரன் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்துக்கு கீழ் வந்தது

தங்கம் விலை இன்று காலையில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்த நிலையில், மாலையில் மீண்டும் குறைந்துள்ளது.

சென்னை,

தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 12-ந்தேதியில் இருந்து விலை மளமளவென குறைகிறது. கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் எந்த அளவுக்கு ஏற்றம் கண்டதோ, அதே அளவுக்கு இறங்கத் தொடங்கியுள்ளது.

அந்த வகையில் இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,360 அதிரடியாக குறைந்து, ஒரு சவரன் ரூ.1,03,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.670 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,950-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல வெள்ளி விலை இன்று காலையில் கிராமுக்கு ரூ.15-ம், கிலோவுக்கு ரூ.15 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று மாலையில் தங்கம் விலை மேலும் அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாலையில் சவரனுக்கு ரூ.2,240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,01,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.280 குறைந்து ஒரு கிராம் ரூ.12,670-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.7,600 குறைந்து நகைப் பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை இன்று மாலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.