கோப்புப்படம் 
தங்கம்

தங்கம் விலை மேலும் குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளது.

சென்னை,

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப நாள்தோறும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, தங்கம், வெள்ளி மீது சர்வதேச முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தவாறு இருக்கிறது.

இதனிடையே நேற்று சென்னையில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,19,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது.

இன்றைய தங்கம், வெள்ளி விலை

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,19,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,900-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.295-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 95 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை (ஒரு சவரன்) நிலவரம்

27.02.2026 - ரூ.1,19,200

26.02.2026 - ரூ.1,19,360

25.02.2026 - ரூ.1,19,440

24.02.2026 - ரூ.1,19,120

23.02.2026 - ரூ.118,880

Also read:நடிகைகளை கவர்ச்சியாக காட்டவே விரும்புகிறார்கள் - டாப்சி